SRI KALA BAIRAVJI

SRI KALA BAIRAVJI
BHAIRAV KALYAN

Thursday, February 10, 2011

thirukkrungudi

பக்கம் நின்றார் உடன் திருக்குறுங்குடி பெருமாள்

ஸ்ரீ திருக்குறுங்குடி திவ்ய தேசம் 1௦8 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 58-வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் சிவனும் விஷ்ணுவும் சரி சமமாக பாவிக்கப்பட்டு வழிபாடுகளும் நடதப்படுகின்றன.  இங்கு அதிகாலை இருவருக்கும் விஸ்வருபமும், இரவு திருவிசாகமும்  ஒன்றுபோல் நடத்தப்படுகிறது. இந்த திவ்ய தேசம் ஸ்ரீ ஸ்ரீ பேரருலாளர் ராமானுஜ ஜீயர் அவர்களால் பரிபாலனம் செய்யப்பட்டு வருகின்றது.



இந்த திவ்ய தேசம் வாமன ஷேத்ரம், இங்கு தான் மகாபலிசக்கரவர்த்தி மோட்சம் அடைந்ததது மற்றும் இங்கு ஸ்ரீ விஷ்ணு ராமானுஜரிடம் இருந்து மந்தரோபதேசம் பெற்று வைஷ்ணவ நம்பி என்ற தாஸ்ய  நாமத்துடனும், சிவன் பக்கம் நின்றார் என்ற தாஸ்ய  நாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர்.

இந்த திவ்ய தேசத்தில் நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வர்முதலிய ஆச்சர்யர்கள் மங்களாசாசனம் பன்னயுள்ளனர்.

இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் ப்ரம்மஉதச்தவம் , பத்ர தீபம் மற்றும் தேபோத்சவம் திருவிழாக்கள் தவறாது நடை பெற்று வருகின்றது. ப்ரம்மஉதச்தவம் 5ம் திருநாளன்று 5 நம்பி பெருமாள் திருவீதி உலா கண்கொள்ள கட்சியாகும்.

உங்கள் எல்லோரையம் வரவேற்பதில் பெருமிதம் கொண்டு, இங்கு தவறாது வந்து சுவாமியின் அருட்கடட்சதை பெற வேண்டும் உள்ளம்,

கோவில் வருவதற்கு திருநெல்வேலியில் இருந்து பஸ்கள் ஏறுவடி மார்கமாக இயக்கபடுகின்றன. திருநெல்வேலியில் இருந்து பஸ் நம்பர்கள் 564 நாகர்கோயில் வழி ஏறுவடி செல்லும். நாகர்கோயிலில் இருந்து தென்காசி, பாபநாசம் செல்லலும் பஸ்கள் திருக்குறுங்குடி வழியாக செல்லும்.

திரு வி. க.
திருக்குருங்கை
மேலும் விபரங்களுக்கு  8056747393 / 9790383548 (PP)