SRI KALA BAIRAVJI

SRI KALA BAIRAVJI
BHAIRAV KALYAN

Tuesday, August 30, 2011

KALABHAIRAVAR


                   ஸ்ரீ காலபைரவர் திருக்குருங்குடியாகிய   வைஷ்ணவ திவ்ய தேசத்தில் துவி ஜத்ஹோடும் வர்ண கலாப திருமேநியோடும் ஷேத்திர பலகாரக அருள் புரிகிறார். வலது கையில் சூலம், இடது கையில் இங்கு என்ன விஷேசம் என்றால் ஸ்ரீ பைரவரவருக்கு  கபாலமும் கொண்டுள்ளார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. அதனால் கருவறையில் திறப்பு கிடையாது . காற்று வருவதற்கு வழி இல்லை. வாசல் வழியாகத்தான் காற்று வரவேண்டும். முகத்தின்  நேரே ஒரு விளக்கும், இடுப்புக்கு அருகில் சில விளக்குகளும் போடப்பட்டுள்ளது. ஆனால் முகத்தின் நேரே உள்ள விளக்கு அவருடைய சுவாசத்தால் அசைந்து கொண்டே இருக்கும். கீழே உள்ள விளக்கு எதுவும் அசையாது. காட்சியை நீங்களும் கண்டு பகவானின் திருவுள்ளத்திற்கு பத்திரமகுமாறு  பிரார்த்திக்கிறேன். பகவானுக்கு உகந்த தினம் தேய் பிறை அஷ்டமி.






வழிபாட்டு விபரங்கள்

தேய் பிறை அஷ்டமி அன்று பகவானுக்கு நீரன்ஜனம் போடலாம்.( நீரன்ஜனம் = தாம்பாளத்தில் பச்சை அரிசி பூட்டு அதில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு போடவேண்டும். காரிய சித்தி ஆனவுடன் பூச்சட்டையும் வடையும் பிரசாதமாக படைக்கப்படும்.


பேருந்து மார்க்கம்
கோவில் வருவதற்கு திருநெல்வேலியில் இருந்து பஸ்கள் ஏறுவடி மார்கமாக இயக்கபடுகின்றன. திருநெல்வேலியில் இருந்து பஸ் நம்பர்கள் 565 நாகர்கோயில் வழி ஏறுவடி செல்லும். நாகர்கோயிலில் இருந்து தென்காசி, பாபநாசம் செல்லலும் பஸ்கள் திருக்குறுங்குடி வழியாக செல்லும்.
பகவானுடைய போடோக்கள் இந்த லிங்கில் இருந்து எடுத்துகொள்ளலாம்.

இப்படிக்கு
ஸ்ரீ பைரவதாசன்
திரு . வி. க.
செல்: 9443554528 /8056747393  (¨பைரவ தாசன்).

மற்றும் நீங்கள் விரும்பினால் இங்கு நடக்கவிருக்கும் உத்சவ பஞ்சாங்கம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்க: 8056747393
நன்றி!